என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டி ராஜேந்தர்
நீங்கள் தேடியது "டி ராஜேந்தர்"
நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனின் திருமணத்திற்கு ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். #Kuralarasan #Rajinikanth
டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 29-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்திருக்கிறார் டி.ராஜேந்தர். மேலும் இவருடன் குறளரசனும் சென்றிந்தார்.
சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய குரளரசன், இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்.
நேற்று தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தை சந்தித்து அழைப்பிதழை டி.ராஜேந்தர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajini #Kuralarasan #TRajendar
அரசியலில் தனது வனவாச காலம் முடிந்துவிட்டதாக லட்சிய தி.மு.க. தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் கூறினார். #TRajendar
சேலம்:
சேலத்தில் லட்சிய தி.மு.க. தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தற்போது ரொம்ப தெளிவாக இருக்கிறேன். அமைதியாக, அறிவுப்பூர்வமாக, ஆழமாக, ஆன்மிக ரீதியாக சிந்தித்து பதில் பேச முடிவு செய்து உள்ளேன்.
நான் அரசியலில் இத்தனை காலம் போராடிவிட்டேன். 14 ஆண்டுகள் லட்சிய தி.மு.க.வை நடத்தினேன். இப்போது 15-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் 14 ஆண்டுகள் முடிந்து விட்ட காரணத்தால், என்னுடைய வனவாச காலம் முடிந்து விட்டது. எனவே எனக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று நினைக்கிறேன்.
அரசியலிலும், சினிமாவிலும் எம்.ஜி.ஆர். பெரிய ஜாம்பவான். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் நான் அரசியலில் போராடிவிட்டேன். ஜாம்பவான்கள் காலத்திலேயே போராடிய பிறகு இப்போது உள்ள அரசியல் காலத்தில் போராட முடியாதா? நான் கடலிலேயே மீன் பிடித்து பார்த்து விட்டேன். குளத்தில் மீன் பிடிக்க முடியாதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியல் ரொம்ப கடினமானது. எந்த கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்வேன், இது தலைக்கனம் இல்லை.
மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்றது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கருணாநிதி இருந்த காலத்தில் செயல் தலைவர் என்ற பெயரோடு இருந்தார். தற்போது செயலை எடுத்து தலைவராக இருக்கிறார். அவ்வளவுதான். அவருடைய செயல்பாடு இனிமேல் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சிம்பு அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிம்புவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். எனவே தந்தை என்ற முறையில் வழக்கை சந்திப்பேன்.
காவி மயம் குறித்து காலம் வரும் போது பதில் சொல்வேன். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுப்போம். இனி வரும் காலங்களில் படத்தை குறைத்து விட்டு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TRajendar
சேலத்தில் லட்சிய தி.மு.க. தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தற்போது ரொம்ப தெளிவாக இருக்கிறேன். அமைதியாக, அறிவுப்பூர்வமாக, ஆழமாக, ஆன்மிக ரீதியாக சிந்தித்து பதில் பேச முடிவு செய்து உள்ளேன்.
நான் அரசியலில் இத்தனை காலம் போராடிவிட்டேன். 14 ஆண்டுகள் லட்சிய தி.மு.க.வை நடத்தினேன். இப்போது 15-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் 14 ஆண்டுகள் முடிந்து விட்ட காரணத்தால், என்னுடைய வனவாச காலம் முடிந்து விட்டது. எனவே எனக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று நினைக்கிறேன்.
அரசியலிலும், சினிமாவிலும் எம்.ஜி.ஆர். பெரிய ஜாம்பவான். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் நான் அரசியலில் போராடிவிட்டேன். ஜாம்பவான்கள் காலத்திலேயே போராடிய பிறகு இப்போது உள்ள அரசியல் காலத்தில் போராட முடியாதா? நான் கடலிலேயே மீன் பிடித்து பார்த்து விட்டேன். குளத்தில் மீன் பிடிக்க முடியாதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அரசியல் ரொம்ப கடினமானது. எந்த கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்வேன், இது தலைக்கனம் இல்லை.
மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்றது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கருணாநிதி இருந்த காலத்தில் செயல் தலைவர் என்ற பெயரோடு இருந்தார். தற்போது செயலை எடுத்து தலைவராக இருக்கிறார். அவ்வளவுதான். அவருடைய செயல்பாடு இனிமேல் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சிம்பு அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிம்புவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். எனவே தந்தை என்ற முறையில் வழக்கை சந்திப்பேன்.
காவி மயம் குறித்து காலம் வரும் போது பதில் சொல்வேன். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுப்போம். இனி வரும் காலங்களில் படத்தை குறைத்து விட்டு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TRajendar
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் சேலத்தில் பேட்டியளித்துள்ளார். #TRajendar #Simbu
சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், ‘அரசன்’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்து, நடிக்காமல் இருக்கிறார் என்று பேஸ்சன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதுகுறித்து சிம்புவின் அப்பாவும், நடிகரும் லட்சிய தி.மு.க. தலைவருமான டி.ராஜேந்தர் கூறும்போது, ‘சிம்பு நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியை தாங்க முடியாதவர்கள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் அப்பீல் செய்து சட்டப்படி நாங்கள் சந்திப்போம்’ என்றார்.
மது கலாச்சாரத்திற்கு எதிராக உருவாக இருக்கும் கபிலன் வைரமுத்து வரிகளுக்கு டி.ராஜேந்தர் குரல் கொடுக்க இருக்கிறார். #TRajendar
தமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது.
இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த ‘கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர் - கபிலன் வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைக்கிறார். கடந்த ஆண்டு கபிலன் வைரமுத்து வரிகளில் நடிகர் சிலம்பரசன் பாடிய பணமதிப்பிழப்புப் பாடலுக்கும் (demonetization anthem) பாலமுரளிதான் இசை அமைத்திருந்தார்.
மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிட இருக்கிறார்கள். பாடலைக் காட்சிப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு உரியவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் கூறி உள்ளார். #TRajendar #SriReddy
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியதும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் இந்திய பட உலகையே அதிர வைத்தது.
தற்போது ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் சிலர் மீதும் புகார் கூறி உள்ளார். தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரையும் இப்போது சர்ச்சையில் இழுத்து இருக்கிறார் ஸ்ரீரெட்டி.
இது குறித்து இயக்குனர் டி.ராஜேந்தர் கூறும்போது, ‘தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. என் மீது இதுவரை ஒரு கிசுகிசுவும் வந்தது இல்லை. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு, குறிப்பிட்டவர்கள் உரிய விளக்கம் அளித்தால் பிரச்சினைகள் தீரும்’ என்றார்.
இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர், அடுத்ததாக அரசியல் படம் எடுக்க இருந்த நிலையில், மகன் சிம்புவுக்காக அதை கைவிட்டிருக்கிறார். #STR #Simbu
இயக்குனர், நடிகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் தான் அடுத்து இயக்கும் ’இன்றையக் காதல்டா’ படத்தின் விபரத்தை நேற்று அறிவித்தார்.
அரசியல் காமெடி படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் முழு நீள காதல் படத்தை இயக்குவது ஏன்? என்று கேட்டோம். ‘முதலில் முழுநீள அரசியல் காமெடி படம்தான் எடுக்க திட்டமிட்டேன். இந்த தகவல் அறிந்த என் மகன் சிம்பு என்னிடம் உங்களது பலமே காதல் கதை தான்.
காதல் படங்கள் தான் உங்கள் முத்திரை. நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே தான் நான் அரசியலை விட்டு காதலை படமாக்குகிறேன். வீராசாமி படத்தை கிண்டலடித்தார்கள். எனவே இதில் சென்டிமென்ட் அதிகம் இருக்காது’ என்றார்.
இன்றையக் காதல்டா படத்தில் டி.ராஜேந்தருக்கு வில்லியாக டான் வேடத்தில் நமீதா நடிக்கிறார். அவருக்கு கணவராக நடிக்க ஒரு கதாநாயகனிடம் பேசி வருகிறார்கள்.
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் டி.ராஜேந்தர், இன்றைய காதலை பற்றி சொல்லும் விதமாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். #TRajendar
ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை;, வீராசாமி ஆகிய பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான படைப்பு டி.ராஜேந்தரின் ‘இன்றையக் காதல் டா..!
இதில் நமீதா வித்தியாசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் பிரபல நட்சத்திரங்கள், நிறைய கதாநாயகர்கள், கதாநாயகிகள், இளம் நகைச்சுவை நடிகர்கள் ஆக பல புதிய முகங்களை அறிமுகம் செய்கிறார்கள். மற்றும் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், உள்ளிட்ட பல நகைச்சுவை பட்டாளங்கள் நடிக்கிறார்கள்.
முழுக்க, முழுக்க இளமை சொல்லும் காதல் கதையாகவும், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், காதல்... காதல்... காதலை தவிர வேற ஒன்றும் இல்லை என்றும் உருவாக்க இருக்கிறார் டி.ராஜேந்தர்.
நேற்று நடந்த தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் டி.ராஜேந்தர் கூறிய புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar
என் மீது எதிரணியினர் சுமத்தியுள்ள குற்றசாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால்.
நேற்று பாரதிராஜா தலைமையில் டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் கூடி பேசினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. எல்லாக் கணக்குகளும் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பைரசி இணையதளங்களை வேரோடு அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். வார்த்தைகளை விட செயல் மூலம் பேசுவதே சரியாக இருக்கும்’ இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகளை மீறி செயல்பட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். #Vishal #ProducerCouncil
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், நடிகர்கள் ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் ஒராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்று கூறி இருந்தார். 2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
54 நாட்கள் சினிமா ஸ்டிரைக் காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் படத்துக்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைக்கிறது. மற்றவர்களது படங்களுக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை.
எனவே விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது நாங்கள் விரட்டுவோம். புதிதாக தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து தயாரிப்பாளர் சங்கத்தை மாற்ற முன்வர வேண்டும். தமிழர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். விஷால், தனது படத்தை பற்றி மட்டும் கவலைப்படாமல், மற்ற படங்களை பற்றியும் கவலைப்பட வேண்டும் என்று அனைவரும் பேசினார்கள்.
துப்பறிவாளன் படத்தில் நடித்து விட்டால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா என்று நடிகர் விஷாலுக்கு இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar
விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இப்படம் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், வாக்குறுதிகளை மீறி விஷால் செயல்பட்டு விட்டதாக கூறி இயக்குனர் பாரதிராஜா, ராதாரவி, டி.ராஜேந்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பேட்டியளித்தனர்.
இதில் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. துப்பறிவாளன் படத்தில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா? தமிழ் ராக்கர்சை பிடித்து விட்டேன். நெருங்கி விட்டேன் என்றெல்லாம் கூறினார். எங்கே போனார்கள் தமிழ் ராக்கர்ஸ். ஏன் இன்னும் சொல்ல வில்லை. எங்கே போனது ரூ.7 கோடி வைப்புநிதி? பதில் சொல்ல முடியுமா? பொதுக்குழுவை நடத்த முடியாதபோது, ஸ்டிரைக் நடத்தியது ஏன்? ஒரு படத்திற்கு 200 திரையரங்குகள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கூறிவிட்டு, அவருடைய ‘இரும்புத்திரை’ படத்தை மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார்.
க்யூப் கட்டணம் குறைப்பதற்காக விஷால் ஸ்டிரைக் நடித்தினார். ஆனால், க்யூப் கட்டணம் குறைந்ததா? மூத்த உறுப்பினர்கள் பிரிந்து கிடப்பதால் யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள். இந்தநிலை மாற வேண்டும்’ என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X